by Chandrasekaram Chandravadani 04-03-2020 | 8:29 AM
Colombo (News 1st) பிரேஸிலின் ஸாவோ போலோ (São Paulo) மற்றும் ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) ஆகிய மாநிலங்களின் கரையோரப் பகுதிகளில் நிலவும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ள அனர்த்தத்தில் சிக்கி மேலும் 30 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமல்போனோரைத் தேடும் பணிகளில் அந்நாட்டு மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் சாவோ போலோ மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மண்சரிவினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் பல வீதிகளின் போ்ககுவரத்தும் தடைப்பட்டுள்ளன.
பிரேஸிலில் கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கி சுமார் 30 பேர் வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.