தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் ஆராய இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை கூடியது

தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் ஆராய இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை கூடியது

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2020 | 9:02 pm

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் கூட்டம் பம்பலப்பிட்டியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளை இன்று கூடியது.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, கட்சியின் கொழும்புக்கிளை அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்