by Staff Writer 04-03-2020 | 3:53 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.
எவ்வித காரணங்களுக்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறினார்.