சஜித் உள்ளிட்ட பெரும்பான்மை உறுப்பினர்களின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியது

சஜித் உள்ளிட்ட பெரும்பான்மை உறுப்பினர்களின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியது

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2020 | 7:45 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று பிற்பகல் கூடியது.

எனினும், அதிகளவிலான உறுப்பினர்கள் இன்று கலந்துகொண்டிருக்கவில்லை.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அதிகளவிலானோர் கலந்துகொள்ளவில்லை.

கட்சி பிளவுபடாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியை பாதுகாக்கும் வகையில் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக அகில விராஜ் காரியவசம் கூறினார்.

அத்துடன், வேட்புமனு குழு இன்று நியமிக்கப்பட்டதாகவும் அதில் கட்சியின் தலைவர், பிரதி தலைவர், உப தலைவர், பொதுச்செயலாளர், தேசிய அமைப்பாளர் கபீர் ஹாசிம் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பாக தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கு அன்று அனுமதி வழங்கப்பட்டது. எனினும், தற்போது அது கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து இன்று கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இங்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த கூட்டமைப்பு தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாகவுள்ளது. எனினும், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதாக செயற்குழுக்கூட்டத்தில் கூறப்படவில்லை. தேர்தல் செயற்பாடுகள், வேட்புமனு பட்டியலை தயாரித்தல் உள்ளிட்ட விடயங்கள் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் இடம்பெற்றாலும், யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கே தீர்மானிக்கப்பட்டது. தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறினால், கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி நான்
பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்

என அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்