by Staff Writer 04-03-2020 | 3:40 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை ஹஜ் கடமையின் போது விசேட கவனம் செலுத்தப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் A.P.M.அஷ்ரப் தெரிவித்தார்.
உம்ரா விசா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இலங்கை வௌிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளது.
இதனால், நிலைமை சீரான பின்னர் மீண்டும் விசா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுமதிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட முகவர்கள் ஊடாக மாத்திரமே ஹஜ் யாத்திரையை மேற்கொள்வது சிறந்தது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் A.P.M.அஷ்ரப் குறிப்பிட்டார்.
மேலும், பதிவு செய்யப்பட்ட முகவர்களுக்கு மாத்திரமே இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு முகவர்கள் உட்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முகவர்களுடன் விரைவில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு, பெயர்ப்பட்டியலை வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.