by Chandrasekaram Chandravadani 03-03-2020 | 3:23 PM
தன்னையும் தனது குழுவையும் நம்பியமைக்கு விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
பிகில் படத்தின் பின்னர் இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆன்ட்ரியா உட்பட பல பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
எதிர்வரும் ஏப்ரலில் வௌியாகவுள்ள மாஸ்டர் பட பாடல்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தொடர்ச்சியாக 129 நாட்கள் இடம்பெற்ற படப்பிடிப்பு இதயத்திற்கு நெருக்கமான ஒரு பயணம் எனவும் தன்னையும் தனது குழுவையும் நம்பியமைக்காக விஜய்க்கு நன்றி எனவும் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.