by Staff Writer 03-03-2020 | 12:40 PM
Colombo (News 1st) லிபியாவிற்கான ஐக்கியநாடுகள் சபையின் விசேட தூதுவர் கஸன் சலாம் (Ghassan Salame) தமது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
லிபியாவில் சமாதானத்தை ஏற்படுத்த தாம் மேற்கொள்ளும் முயற்சிகள், தமது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பதாகத் தெரிவித்தே பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது உடல்நலம் தொடர்ந்தும் மன அழுத்தத்தை அனுமதிக்காது என்பதால், தனது கடமைகளிலிருந்து விடுவிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டதாக Ghassan Salame கூறியுள்ளார்.