மேற்கிந்தியத் தீவுகள் – இலங்கை இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 தொடர் நாளை ஆரம்பம்

மேற்கிந்தியத் தீவுகள் – இலங்கை இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 தொடர் நாளை ஆரம்பம்

மேற்கிந்தியத் தீவுகள் – இலங்கை இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 தொடர் நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2020 | 9:45 pm

Colombo (News 1st) மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.

2 போட்டிகளும் கண்டி பல்லேகெலே சர்வதேச மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் 2 போட்டிகளைக் கொண்டதாகும்.

முதல் போட்டி நாளை இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டிக்கான இலங்கை குழாம் வீரர்கள் இன்று முற்பகல் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்குபற்றும் இங்கிலாந்து குழாம் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்