தங்காலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி 

தங்காலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி 

தங்காலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி 

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2020 | 4:16 pm

Colombo (News 1st) தங்காலை – மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரண வீடொன்றுக்கு குறித்த நபர் சென்றுகொண்டிருக்கையில் இன்று பகல் 1 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

36 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்