இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2020 | 7:38 am

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்வதற்காக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெரிய வெங்காய தொகையை இறக்குமதி செய்யவுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை ​135 முதல் 140 ரூபாவிற்கு இடையில் காணப்படுவாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில், வருடாந்தம், பெரிய வெங்காயத்திற்கு, 250,000 மெட்ரிக் தொன் கேள்வி நிலவுவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் நாட்டில் வெங்காய உற்பத்தி 25,000 மெட்ரிக் தொன்னாக வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்