சரத் ரூபசிறி கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

by Staff Writer 02-03-2020 | 7:18 PM
Colombo (News 1st) புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக U.V. சரத் ரூபசிறி இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரமுடைய அதிகாரியாவார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் 23 வருடங்களாக சேவையாற்றிய சரத் ரூபசிறி, கட்டுப்பாட்டாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றுள்ளார். 1987ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்துகொண்ட அவர், அதற்கு முன்னர் சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.