by Staff Writer 02-03-2020 | 4:38 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகுவதாக இன்டியானா மாநிலத்தின் முன்னாள் மேயர் Pete Buttigieg அறிவித்துள்ளார்.
38 வயதான Pete Buttigieg, ஜனாதிபதிக்காகப் போட்டியிட்ட முதலாவது ஓரினச் சேர்க்கையாளராகப் பதிவாகியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியை Pete Buttigieg வெற்றியுடன் ஆரம்பித்திருந்த போதிலும், அண்மைய வாரங்களில் அவரது பிரசாரம் வலுவிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான ஆரம்பப்போட்டி நாளைய தினம் 14 மாநிலங்களில் நடைபெறவுள்ள நிலையில், Pete Buttigieg இன் இடைவிலகல் அறிவிப்பு வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில், பேர்ணி சன்டெர்ஸ் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.