பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி வௌியீடு

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி வௌியீடு

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2020 | 10:50 pm

Colombo (News 1st) நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

வௌியாகிய வர்த்தமானியின் அடிப்படையில், பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

புதிய பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி கூடவுள்ளதாகவும் ​தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இதன்போது கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்