தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றல்

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றல்

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2020 | 8:33 pm

Colombo (News 1st) கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவுடன் இணைந்து தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 330 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின், 50 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்ட்ட சுற்றிவளைப்புக்களின் தொடர்ச்சியாக இன்றைய தினமும் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கமான்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 10 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 7 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் களனி பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்