குருநாகலில் தொடர்ந்தும் தீ அணைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

குருநாகலில் தொடர்ந்தும் தீ அணைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

குருநாகலில் தொடர்ந்தும் தீ அணைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2020 | 7:44 am

Colombo (News 1st) குருநாகல் – சுந்தராபொல குப்பைமேட்டில் பரவிய தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தீயை கட்டுப்படுத்துவதற்கான Bell 212 வகையிலான ஹெலிகொப்டர் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

ஹிங்குரக்கொட விமானப்படைத் தளத்தின் ஹெலிகொப்டர் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை, குருநாகல் நகரசபை தீயணைப்புப் பிரிவு, குளியாப்பிட்டிய, சிலாபம் நகர சபைகளின் தீயணைப்பு வாகனங்களும் தீயை கட்டுப்படுத்துவதற்கு அனுப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் பிரதேச மக்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

குருநாகல் சுந்தராபொல குப்பை மேட்டில் நேற்று தீ பரவியது.

இதேவேளை, குப்பை மேட்டுப் பகுதியை பார்வையிட வருவதை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுடன் அப்பகுதிக்கு மக்கள் வருகை தருவதாகவும் குப்பைமேட்டுத் தீயினால், சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் குருநாகல் மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்