உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2020 | 1:23 pm

Colombo (News 1st) உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதனப்படிப்படையில் உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1,586 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

ஏனைய நாணய பெறுமதியுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் நாணயப்பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதுடன், தங்கத்திற்கான முதலீடு அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், உள்ளூர் சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை ​71,950 ஆக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் 78,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்