ஈரானிய தண்டனை தொடர்பான திரைப்படத்திற்கு விருது

ஈரானிய தண்டனை தொடர்பான திரைப்படத்திற்கு விருது

ஈரானிய தண்டனை தொடர்பான திரைப்படத்திற்கு விருது

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2020 | 1:07 pm

Colombo (News 1st) ஈரானில் வழங்கப்படும் உயர்ந்தபட்ச தண்டனை தொடர்பான திரைப்படமொன்று பேர்ளின் (Berlin) சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மொஹமட் ரசூலொப் எனும் ஈரானிய இயக்குநரின் There Is No Evil திரைப்படத்திற்கு கோல்டன் பெயார் விருது வழங்கப்பட்டுள்ளது.

அவரது முன்னைய திரைப்படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஈரானுக்கு வௌியே பிரயாணம் செய்வதற்கும் இயலாத நிலையில், அவரது மகளும் இந்தத் திரைப்படத்தின் நட்சத்திரமுமான பாரன், தந்தை சார்பாக இந்த விருதைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டு திரைப்படம் இயக்கத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, தமது 6 ஆவது திரைப்படமான There Is No Evil என்ற திரைப்படத்தை இரகசியமாகத் தயாரித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்