இன்று நள்ளிரவின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

இன்று நள்ளிரவின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

இன்று நள்ளிரவின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2020 | 1:15 pm

Colomb (News 1st) இன்று (01) நள்ளிரவுடன் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளது.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதிக்கு இந்த அதிகாரங்கள் கிடைக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

2015 ஆகஸ்ட் 17 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுடன் 2015 செப்டம்பர் முதலாம் திகதி, பாராளுமன்றம் கூடியது. அரசியலமைப்பிற்கு அமைய பாராளுமன்றத்தின் முதற் கூட்டத்தொடரிலிருந்து, 4 வருடங்களும் 6 மாதங்களும் கடந்த பின்னர், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும், பெப்ரவரி மாதம் நிறைவடைவதுடன், நான்கரை வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதன்பிரகாரம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்காக அதிகாரம் கிடைக்கவுள்ளது. சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இன்றைய தினத்தின் பின்னர், அதாவது மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் எவ்வேளையிலும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. இதனடிப்படையில் நாளைய தினத்திற்குள், அல்லது அதன்பின்னர் அல்லது ஆகஸ்ட் செப்டம்பர் மாதம் வரை பாராளுமன்றத்தை கொண்டு செல்வதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு உள்ளது. பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கும் பட்சத்தில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரான 10 முதல் 17 நாட்களுக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நாள், வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், 5 அல்லது 6 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் பாராளுமன்றம் மீண்டும் கூடும் திகதி உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியிடப்பட வேண்டும். வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதன் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கிடைக்கும், அதன்பின்னர் தெரிவத்தாட்சி அதிகாரிகள் யார்? கட்டுப்பணம் எவ்வளவு? தேர்தலில் புள்ளியிடுதல் ஆகிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்படும். அதன் பின்னரே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்த முடியும். எவ்வாறாயினும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதன் பின்னரே ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்