மக்கள் சக்தி திட்டத்துடன் கைகோர்க்கும் அமெரிக்காவின் கிளின்டன் கல்லூரி

by Staff Writer 29-02-2020 | 4:00 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் கிளின்டன் கல்லூரி (Clinton School of Public Service) "மக்கள் சக்தி" திட்டத்துடன் 2020 ஆம் ஆண்டு சர்வதேச பொதுச்சேவையில் இணைந்துகொள்வதாக அறிக்கை வௌியிட்டுள்ளது. பொதுச் சேவைக்கான பட்டதாரி கற்கையை ஏற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கல்லூரியே கிளின்டன் கல்லூரி. ஜனாதிபதி பில் கிளின்டனை நினைவுகூரும் வகையில், அகன்ஷோ லிட்டில் ரொக்சி என்பவர் தனது பொதுச்சேவையை ஆரம்பிப்பதற்காக இந்த கல்லூரியை ஸ்தாபித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு தங்களின் கல்லூரியின் பங்குதாரராக மக்கள் சக்தி திட்டத்தை இணைத்துக்கொள்கின்றமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக கிளின்டன் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மக்கள் சக்தி மற்றும் கிளின்டன் கல்லூரி ஆகியவற்றிற்கு இடையிலான மேலதிக செயற்பாடுகளுக்கு தேவையான அத்திவாரத்தை இடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கிராமத்து மக்கள் எதிர்நோக்கும் மிக பாரிய அச்சுறுத்தலான காட்டு யானை பிரிச்சினை குறித்து முதலாவதாக கவனம் செலுத்தப்படவுள்ளது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திரனின் எண்ணக்கருவிற்கு அமைய உருவாக்கப்பட்ட மக்கள் சக்தி திட்டமானது, அமெரிக்காவின் ஒக்ஸ்ஃபோர்ட் மற்றும் பிரவுன் போன்ற பிரபல கல்வி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டம் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.