காலி கடற்பரப்பில் சுற்றிவளைப்பு: 1180 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

by Staff Writer 29-02-2020 | 7:41 PM
Colombo (News 1st) காலி கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 1180 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். 68 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.