முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்பு

எழுத்தாளர் Staff Writer

29 Feb, 2020 | 7:27 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பிரதேச செயலாளராகவும் மேலதிக அரசாங்க அதிபராகவும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றிய கே.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வறுமையில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல முக்கிய விடயங்களைத் தான் அவதானித்திருப்பதாகவும் அரசியல் பிரமுகர்களின் ஆதரவைப் பெற்று செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் புதிய அரசாங்க அதிபர் கே.விமலநாதன் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்