கொரோனா குணங்குறிகளுடன் இத்தாலியிலிருந்து வருகை தந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

கொரோனா குணங்குறிகளுடன் இத்தாலியிலிருந்து வருகை தந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

கொரோனா குணங்குறிகளுடன் இத்தாலியிலிருந்து வருகை தந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

29 Feb, 2020 | 3:35 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் இத்தாலியிலிருந்து வருகை தந்த இருவரின் மாதிரிகள், இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தடிமன் உள்ளிட்ட குணங்குறிகளுடன் இத்தாலியிலிருந்து வருகை தந்தமையால், குறித்த இருவரும் ஶ்ரீ ஜயவர்தனபுர மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து இருவரும் அங்கொ​டை தேசிய தொற்றுநோயியல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இவர்கள் இருவர் அடங்கலாக கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர் அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில், இத்தாலியில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என அந்நாட்டிற்கான இலங்கையின் பதில் கன்சியூலர் நாயகம் பிரபாஷினி பொன்னப்பெரும தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்