ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் ஐந்து சிறுபான்மைக் கட்சிகள் இணைவு

by Staff Writer 28-02-2020 | 9:46 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு எனும் புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் புதிதாக ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளன. 1. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 3. தேசிய காங்கிரஸ் 4. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் 5. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய ஐந்து கட்சிகளே ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் புதிதாக இணைந்துள்ளன.