by Staff Writer 28-02-2020 | 7:26 PM
Colombo (News 1st) ஹட்டன் - நல்லதண்ணி காட்டுப்பகுதியில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த பெல் - 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
இரத்மலானையிலிருந்து இந்த ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் கூறினார்.
நல்லத்தண்ணி பகுதியிலுள்ள காட்டில் நேற்று மாலை தீ பரவியுள்ளது.
இதன் காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.