சுற்றுலா அபிவிருத்தி வரி நீக்க கால எல்லை நீடிப்பு

சுற்றுலா அபிவிருத்தி வரி நீக்கத்திற்கான கால எல்லை நீடிப்பு

by Staff Writer 28-02-2020 | 4:05 PM
Colombo (News 1st) சுற்றுலா அபிவிருத்தி வரியை அறிவிடாதிருப்பதற்கான கால எல்லையை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி வரியை அறவிடாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கான கால எல்லை கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.