ஐ.தே.க செயற்குழு கூடியது; இறுதித் தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க செயற்குழு கூடியது; இறுதித் தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2020 | 9:26 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று மாலை கூடியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் செயற்குழு கூடியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுவதற்கு அனைவரும் இன்று இணக்கம் தெரிவித்தனர். அது தொடர்பான யாப்பை செயற்குழு ஏற்றுக்கொண்டது. சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அன்னச்சின்னம் தொடர்பில் நாம் பேசினோம். இது தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதித் தீர்மானம் எட்டப்படும்

என ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்