153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2020 | 3:41 pm

Colombo (News 1st) 153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் போது சித்தியடைந்தவர்கள் புதிய அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கல்விச்சேவை ஆணைக்குழுவினால் இவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் 373 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்றன.

அவற்றில் 278 தேசிய பாடசாலைகளுக்கு உரிய தரத்திலான அதிபர்கள் இதுவரை காலம் நியமிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி அமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்