முள்ளுத்தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 27-02-2020 | 6:27 PM
Colombo (News 1st) முள்ளுத்தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலி - உடுகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். முள்ளுத்தேங்காய் செய்கை தொடர்பில் வினைதிறன் மிக்க சூழல் ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் முள்ளுத்தேங்காய் செய்கையில் கிடைக்கும் இலாபத்தை பொருட்படுத்தக்கூடாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, இறப்பர் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் உடனடியாக இறப்பர் இறக்குமதியை நிறுத்துவது தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப கற்கைகளை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.