கொரோனா: இத்தாலியில் பலி எண்ணிக்கை 400ஆக அதிகரிப்பு

கொரோனாவின் கோரத்தாண்டவம்: இத்தாலியில் பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 27-02-2020 | 8:38 AM
Colombo (News 1st) இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட 25 வீத அதிகரிப்பாக இது கருதப்படுகின்றது. இத்தாலியில் இருந்து பரிவியிருக்கலாம் என கருதப்படும் தொற்றுக்குள்ளாகிய பலர் ஐரோப்பாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே, சீனாவுக்கு வௌியே Covid-19 வைரஸ் மிக வேகமாக பரவிவருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. Covid-19 வைரஸினால் சுமார் 40 நாடுகளில் புதிதாக 80,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சர்வதேச ரீதியில் நேற்று முன்தினம் இரவு 80 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியதுடன் நேற்றைய தினம் அந்த எண்ணிக்கை 400 வரை அதிகரித்துள்ளது. வடக்கு மெசிடோனியா மற்றும் கிரேக்கத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தநிலையில், இத்தாலியில் தொடர்ந்தும் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். நேற்றையதினம் 240 ஆக இருந்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நள்ளிரவில் மாத்திரம் 259 ஆக அதிகரித்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, வெனாட்டுவில் புதிதாக நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆகப் பதிவாகியதுடன், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், பாகிஸ்தானில் தொற்றுக்குள்ளான முதல் இருவரும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் பிரேஸிலிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே , ஈரானில் Covid-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்பில் அமெரிக்கா அச்சத்தை பரப்ப முயற்சித்து வருவதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி குற்றஞ்சுமத்தியுள்ளார்.