by Staff Writer 27-02-2020 | 11:18 AM
Colombo (News 1st) அனுராதபுரம் ரயில்வே உதவி கண்காணிப்பாளர் மீது நேற்றிரவு பெட்ரோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காயத்திற்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையளாளர் டிலந்த பெர்னாண்டோவிடம் வினவியபோது, சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.