மீன்பிடியை பாதுகாத்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வழிவகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 

மீன்பிடியை பாதுகாத்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வழிவகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 

மீன்பிடியை பாதுகாத்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வழிவகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2020 | 7:40 am

Colombo (News 1st) மீன்பிடிக் கைத்தொழிலைப் பாதுகாத்து நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழிவகைகளை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஏற்றுமதி சந்தை தொடர்பாக, கொள்கை அடிப்படையில் புதிய திட்டங்களை வகுக்கும்போது ஏற்றுமதியாளர்கள், மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றின் மூலம் செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது தெளிவூட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பான முறைகளில் மீன் பிடிப்பதை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், ஏற்றுமதி நிறுவனங்கள் தமது கப்பல் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை மாத்திரமே கொள்வனவு செய்வதாக மீனவ தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

தாம் ஏற்றுமதி கைத்தொழிலில் மாத்திரம் தங்கியுள்ளதால், தமது விளைச்சலுக்கு உரிய சந்தை வாய்ப்புக்கள் கிடைக்காமை
பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகள் மூலம் இப்பிரச்சினையை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக தனியார் துறையினரின் உதவியோடு அவர்களின் விளைச்சலை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த பெரேரா, காஞ்சன விஜேசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்த கலந்துரையாடலில்கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்