பல்கலைக்கழக CCTV கெமராவை சேதப்படுத்தியோர் மீது சட்ட நடவடிக்கை – உயர்கல்வி அமைச்சர்

பல்கலைக்கழக CCTV கெமராவை சேதப்படுத்தியோர் மீது சட்ட நடவடிக்கை – உயர்கல்வி அமைச்சர்

பல்கலைக்கழக CCTV கெமராவை சேதப்படுத்தியோர் மீது சட்ட நடவடிக்கை – உயர்கல்வி அமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2020 | 10:00 am

 Colombo (News 1st) களனி பல்கலைக்கழகத்தில் CCTV கெமராவினை சேதப்படுத்திய நபர்களுக்கு எதிராக பொது உடமை சட்டத்தின் கீழ் நடிவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை களனி பல்கலைக்கழகத்தின் CCTV கெமராவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அகற்றியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்