தேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்

தேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்

தேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2020 | 1:02 pm

Colombo (News 1st) தேங்காய்க்கான நிர்ணய விலை நியமிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொட்பில் தெங்கு அபிவிருத்தி சபையுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபடுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தையில் தற்போது தேங்காயின் விலை 80 ரூபா வரை அதிகரித்துள்ளது.

தேங்காய் விலை அதிகரித்தமைக்கான காரணம் என்ன, மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்குவது என்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்