தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இருவரின் பெயர்கள் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2020 | 5:34 pm

Colombo (News 1st) எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள இருவரின் பெயர்களை கட்சி அறிவித்துள்ளது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 10 உறுப்பினர்கள் பாராளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்படவுள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் 4 உறுப்பினர்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்னனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ஞா.பிரதீபன் ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் இன்னும் இரு வேட்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்