சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2020 | 1:19 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

லலித் பத்திநாயக்க இதற்கு முன்னரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இது வரையில் 72 பேர் சாட்சியமளித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்