ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2020 | 8:25 am

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வின்போது இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் பதில் வழங்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/01 மற்றும் 40 /1 ஆகிய பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாக நேற்றைய அமர்வின்போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைககள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்