ஆசிரியர் – அதிபர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

ஆசிரியர் – அதிபர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

ஆசிரியர் – அதிபர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2020 | 8:02 am

Colombo (News 1st) ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று (27) முதல் சட்டப்படி வேலை செய்வதற்குத் தீர்மானித்துள்ளன.

ஆசிரியர் சேவையை, தொழில்முறை சேவையாக மாற்றுதல், இடைக்கால சம்பள சுற்றறிக்கை வழங்குதல், கல்விக்கு 6 சதவீத ஒதுக்கீடு, பாடசாலை பராமரிப்புக்காக பெற்றோரிடமிருந்து பணம் சேகரிப்பதைத் தவிர்த்தல், 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் சேவையில் இணைந்த ஆசிரியர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தினர், நேற்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால், நாடளாவிய ரீதியில் பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்