மே 4 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுத்தேர்தல்

மே 4 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுத்தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு

by Staff Writer 26-02-2020 | 1:30 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கும் மே மாதம் 4ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத்தேர்தலை நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஏனைய தேர்தல்களுக்கான திகதியை நியமிப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் காணப்படுகின்ற போதிலும், பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே தங்கியுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்துள்ளார். சித்திரைப் புதுவருடப்பிறப்பு மற்றும் வெசாக் பூரணை தினம் ஆகியன வருவதால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தேர்தலை நடத்தவேண்டி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை அதிகமாக காணப்படுவதால் இந்த நிலை ஏற்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்