மாங்குளத்தில் மனித எச்சங்கள்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மாங்குளத்தில் மனித எச்சங்கள்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மாங்குளத்தில் மனித எச்சங்கள்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2020 | 9:12 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கடந்த 12 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சுற்றுலா நீதிமன்ற அமர்வில் பதில் நீதிபதி எஸ்.கங்காதரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இன்று மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்