பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

by Staff Writer 26-02-2020 | 7:23 AM
Colombo (News 1st) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோருக்கு இடையில் இன்று (26) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது. இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இன்று கலந்துரையாடப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்