பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து

பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2020 | 9:03 pm

Colombo (News 1st) பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும், பாராளுமன்றத்தைக் கலைத்த பின்னர், அவசர சந்தர்ப்பங்களின் போது நிதியத்தில் இருந்து நிதி வழங்க முடியும் என அரசியலமைப்பில் காணப்படுகின்றது. எனினும், அவ்வாறு நிதியமொன்று இல்லை. நிதியமொன்று ஸ்தாபிக்கப்படாத காரணத்தினால், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் விசேட பத்திரத்தின் ஊடாக ஜனாதிபதி நிதியைப்பெற முடியும் என மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்