நெல் கொள்வனவிற்காக 423.7 மில்லியன் ரூபா செலவு

நெல் கொள்வனவிற்காக 423.7 மில்லியன் ரூபா செலவு

நெல் கொள்வனவிற்காக 423.7 மில்லியன் ரூபா செலவு

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2020 | 7:28 am

Colombo (News 1st) கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி தொடக்கம் இம் மாதம் 23ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 8,474 மெற்றிக் தொன் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளது.

இதற்காக அசராங்கம் 423.7 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

அதனடிப்படையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1462.8 மெற்றிக் தொன்
கிளிநொச்சி மாவட்டத்தில் 921.6 மெற்றிக் தொன்
யாழ். மாவட்டத்தில் 25 மெற்றிக் தொன்
வவுனியா மாவட்டத்தில் 652.8 மெற்றிக் தொன்
மன்னார் மாவட்டத்தில் 895.2 மெற்றிக் தொன்
அம்பாறை மாவட்டத்தில் 1524.1 மெற்றிக் தொன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2058.5 மெற்றிக் தொன்
திருகோணமலை மாவட்டத்தில் 69.6 மெற்றிக் தொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்