நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2020 | 9:20 am

Colombo (News 1st) நாட்டில் 271,789 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய, ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வாக்களார் இடாப்பில் ஒரு கோடியே 59 இலட்சத்து 96 பேர் மாத்திரமே பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகூடிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 17,85,964 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் குறைந்தபடியான வாக்காளர்களாக 287,024 பேர் பதிவாகியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய, காலி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்திலிருந்து ஒன்பதாகக் குறைவடைந்துள்ளது.

எனினும், பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவாகக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டிலிருந்து ஒன்பதாக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்