டெஸ்ட் தரவரிசையில் பின்தள்ளப்பட்டார் விராட் கோலி

டெஸ்ட் தரவரிசையில் பின்தள்ளப்பட்டார் விராட் கோலி

by Bella Dalima 26-02-2020 | 5:41 PM
Colombo (News 1st) ICC டெஸ்ட் போட்டிக்கான துடுப்பாட்ட தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதனிடையில், ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை அவர் 8 ஆவது முறையாகப் பிடித்துள்ளார். அவர் பெற்றுக்கொண்ட மொத்தப் புள்ளிகள் 911. இந்திய வீரர் விராட் கோலி 906 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். மேலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 853 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் 827 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தையும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (800) 5 ஆவது இடத்தையும் அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (793)  6-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் (764) 7 ஆவது இடத்திலும் இந்திய வீரர்களான ரகானே (760) 8 ஆவது இடத்திலும் புஜாரா (757) 9 ஆவது இடத்திலும் மயங்க் அகர்வால் (727) 10 ஆவது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர்கள் 1. பேட் கம்மின்ஸ் 2. நீல் வாக்னர் 3. ஜேசன் ஹோல்டர் 4. ரபடா 5. ஸ்டார்க் டெஸ்ட் தரவரிசை: ஆல்ரவுண்டர்கள் 1. ஜேசன் ஹோல்டர் 2. பென் ஸ்டோக்ஸ் 3. ஜடேஜா 4. ஸ்டார்க் 5. அஸ்வின்