சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் இணைந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி

சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் இணைந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2020 | 8:42 pm

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘சமகி ஜன பலவேகய’-வுடன் இணைவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்