ஈரானிய பிரதி சுகாதார அமைச்சரும் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்

ஈரானிய பிரதி சுகாதார அமைச்சரும் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்

ஈரானிய பிரதி சுகாதார அமைச்சரும் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2020 | 12:07 pm

Colombo (News 1st) ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர் Iraj Harirchi மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 406 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 78,064 ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியாவில் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 169 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்