இன்று நள்ளிரவு முதல் பாண் விலை 5 ரூபாவால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை 5 ரூபாவால் குறைப்பு

by Staff Writer 26-02-2020 | 8:33 AM
Colombo (News 1st) 450 கிராம் நிறையுடைய பாண் ஒரு இறாத்தலுக்கான விலையை இன்று (26) நள்ளிரவு தொடக்கம் 5 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, நாளை (27) காலை முதல் பாணின் விலை 5 ரூபாவால் குறைவடையும் என அவர் கூறியுள்ளார். இந்த விலை குறைப்பை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துமாறு, எம்.கே. ஜயவர்தன அனைத்து விற்பனையாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.