தினேஷ் குணவர்தன ஜெனிவா சென்றடைந்தார்

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவா சென்றடைந்தார்

by Staff Writer 25-02-2020 | 8:42 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்றாகும். 26 நாட்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் உலகத் தலைவர்கள் அவதானம் செலுத்தினர். 180-க்கும் அதிக நாடுகளின் அரச தலைவர்கள், வௌிவிவகார அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. பெண்களுக்கான உரிமைகளை அரசியல் தேவைகளுக்கான மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடாது என்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் இன்றைய அமர்வில் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவா சென்றடைந்துள்ளார். சுவிட்ஸர்லாந்து நேரப்படி நாளை காலை 10 மணிக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.