ட்ரம்ப் இந்தியா விஜயம்: உடன்படிக்கைகள் கைச்சாத்து

ட்ரம்ப் இந்தியா விஜயம்: பாதுகாப்பு, எரிசக்தி உடன்படிக்கைகளில் கைச்சாத்து

by Staff Writer 25-02-2020 | 9:33 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஒன்றிணைந்து கருத்துத் தெரிவித்துள்ளனர். புது டெல்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வரவேற்பதற்கான விசேட நிகழ்வுகள் புது டெல்லியின் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இதன்போது, எரிசக்தித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன் பின்னர், இருநாட்டுத் தலைவர்களும் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தொடர்பிலான ஒப்பந்தங்களுக்கு இணங்கினாலும் வர்த்தகம் தொடர்பில் இதன்போது பெரிதும் பேசப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.