ஹம்பாந்தோட்டை – கொழும்பு அதிவேக வீதியில் இன்று முதல் பஸ் சேவை

ஹம்பாந்தோட்டை – கொழும்பு அதிவேக வீதியில் இன்று முதல் பஸ் சேவை

ஹம்பாந்தோட்டை – கொழும்பு அதிவேக வீதியில் இன்று முதல் பஸ் சேவை

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2020 | 7:42 am

Colombo (News 1st) அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு – கோட்டை வரையிலான பஸ் சேவை இன்று (25) ஆரம்பமாகவுள்ளது.

ஹம்பாந்தோட்டை – கொழும்பு, தங்காலை – கொழும்பு மற்றும் எம்பிலிப்பிட்டிய – கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையில் இந்த பஸ் சேவை ஆரம்பமாகின்றது.

இதற்கமை அப்பகுதியூடான பஸ் கட்டணங்களாக,
ஹம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரை 880 ரூபா
தங்காலையில் இருந்து கோட்டை வரை 680 ரூபா
ஹம்பாந்தோட்டையில் இருந்து மாக்கும்புர வரை 810 ரூபா
தங்காலையில் இருந்து மாக்கும்புர 610 ரூபா அறவிடப்படவுள்ளது.

நேற்று முன்தினம் திறக்கப்பட்ட மாத்தறை – ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் புதிதாக 10 சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த பஸ்கள் மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கடவத்தை வரையில் சேவையில் ஈடுபடவுள்ளன.

இதேவேளை, சட்ட விதிமுறைகளுக்கு அமையவே ஹம்பாந்தோட்டை – கொழும்பு வரை இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதேவேளை, நேற்று முன்தினம் திறக்கப்பட்ட மாத்தறை – ஹம்பாந்தோட்டை வீதி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்திற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்